Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

அரசர் அரியணை துறக்க ஜப்பானிய அரசாங்கம் ஒப்புதல்

ஜப்பானிய அரசர் ஒரே ஒரு முறை மட்டும் அரியணை துறக்க ஒப்புதல்

வாசிப்புநேரம் -
அரசர் அரியணை துறக்க ஜப்பானிய அரசாங்கம் ஒப்புதல்

(படம்: Reuters)

ஜப்பானிய அரசாங்கம் பேரரசர் அக்கிஹிட்டோ அரியணையைத் துறப்பதற்கு அனுமதியளிக்கும் ஒரே ஒரு முறை மட்டுமான மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

அந்தச் சட்ட மசோதா அவருக்கு மட்டுமே பொருந்தும்.

அவருக்கு அடுத்துப் பதவிக்குவரும் இளவரசரோ, அவரது சந்ததிகளோ அதே சட்டத்தின்கீழ் பதவி துறக்க அனுமதியில்லை.

உடல்நலக்குறைவைக் காரணம் காட்டி பதவி துறக்க விரும்புவதாக 83 வயது பேரரசர் கேட்டுக்கொண்டதற்கிணங்க அந்தச் சட்ட மசோதா கொண்டுவரப்பட்டது.

ஜப்பானில் கடந்த 200 ஆண்டுகளில், பேரரசர் ஒருவர் அரியணையைத் துறக்கவிருப்பது இதுவே முதல் முறை.

மசோதா இனி இறுதியாக நாடாளுமன்ற ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்படும். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்