Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

ஜப்பானில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க புதிய திட்டம் அறிமுகம்

ஜப்பானில் இன்று சுமார் 900 நிறுவனங்கள், அமைப்புகளைச் சேர்ந்தோர் வேலையிடத்தை விடுத்து வேறோர் இடத்தில் பணிபுரிகின்றனர்.

வாசிப்புநேரம் -
ஜப்பானில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க புதிய திட்டம் அறிமுகம்

(படம்: Reuters)

ஜப்பானில் இன்று சுமார் 900 நிறுவனங்கள், அமைப்புகளைச் சேர்ந்தோர் வேலையிடத்தை விடுத்து வேறோர் இடத்தில் பணிபுரிகின்றனர்.

அது தொடர்பான புதிய இயக்கம் இன்று தொடக்கம் கண்டது.
ரயில், பேருந்து, சாலைகள் ஆகியவற்றில் நெரிசலைக் குறைக்க புதிய வேலைச் சீரமைப்புத் திட்டம் அறிமுகம் கண்டுள்ளது.
திட்டத்துக்கு அரசாங்கமும், தொழில்துறைகளும் முழு ஆதரவு அளித்துள்ளன.

2020ஆம் ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டுகளை தோக்கியோ ஏற்று நடத்துகிறது.
அது ஜூலை 24ஆம் தேதி தொடங்குகிறது.
அந்த சமயத்தில் போக்குவரத்து நெரிசல் மிக மோசமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதனால், இப்போது முதல் 2020-ஆம் ஆண்டு வரை, வேலையிடத்தை விடுத்து மற்றோர் இடத்திலிருந்து பணிபுரிய ஊக்குவிக்கும் இயக்கத்தை அவ்வப்போது செயல்படுத்தி வெள்ளோட்டம் பார்க்கத் திட்டமிடப்பட்டுள்ளது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்