Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

'குவாம் ஏவுகணைத் திட்டம் குறித்து வடகொரியத் தலைவருக்குத் தகவல்'

அமெரிக்காவின் குவாம் பகுதிக்கு அருகே, ஏவுகணைகளைப் பாய்ச்சுவதற்கான திட்டம் பற்றி, வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன்னுக்கு, அந்நாட்டு ராணுவ அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர்.

வாசிப்புநேரம் -
'குவாம் ஏவுகணைத் திட்டம் குறித்து வடகொரியத் தலைவருக்குத் தகவல்'

(படம்: KCNA/via REUTERS)

அமெரிக்காவின் குவாம் பகுதிக்கு அருகே, ஏவுகணைகளைப் பாய்ச்சுவதற்கான திட்டம் பற்றி, வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன்னுக்கு, அந்நாட்டு ராணுவ அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர்.
அமெரிக்கக் கடற்படைத் தளங்களும், ஆகாயப் படைத் தளங்களும் அமைந்திருக்கும் பகுதி, குவாம்.

அந்த ஏவுகணை திட்டத்தைத் திரு கிம் நீண்ட நேரம் ஆராய்ந்ததாகவும் அது குறித்து அதிகாரிகளிடம் கலந்துபேசியதாகவும் தெரிவிக்கப்பட்டது.

குவாமுக்கு அருகில் 4 ஏவுகணைகளைப் பாய்ச்சுவதற்கான விரிவான திட்டம் தொடர்பான விவரங்கள் இம்மாத நடுப்பகுதிக்குள் உறுதிபடுத்தப்படும் என்று வடகொரிய ராணுவம் கடந்த வாரம் கூறியிருந்தது.

அந்தத் திட்டத்தை தலைவர் கிம்மின் ஒப்புதலுக்குச் சமர்ப்பிக்கவிருப்பதாகவும் அது குறிப்பிட்டிருந்தது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்