Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

கோலாலம்பூர்: சிலாங்கூர் சுல்தானுக்கு ஆதரவாக நூற்றுக்கணக்கான மக்கள் பேரணி

சிலாங்கூர் சுல்தானுக்குத் தங்கள் ஆதரவைத் தெரிவிக்கும் வண்ணம், கோலாலம்பூரில் இன்று நூற்றுக்கணக்கானோர் ஒன்றுகூடினர்.

வாசிப்புநேரம் -
கோலாலம்பூர்: சிலாங்கூர் சுல்தானுக்கு ஆதரவாக நூற்றுக்கணக்கான மக்கள் பேரணி

(படம்: CNA/ Twitter@AugustTeh)


சிலாங்கூர் சுல்தானுக்குத் தங்கள் ஆதரவைத் தெரிவிக்கும் வண்ணம், கோலாலம்பூரில் இன்று நூற்றுக்கணக்கானோர் ஒன்றுகூடினர்.

மலேசியாவின் ஆளும் தேசிய முன்னணி, அந்தப் பேரணிக்கு ஏற்பாடு செய்திருந்தது.

எதிர்த்தரப்பு அரசியல் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் சையது இப்ராஹிம், முன்னாள் பிரதமர் மகாதீர் முகமது-ஆகியோருக்கு எதிராக ஆர்ப்பாட்டக்காரர்கள் முழக்கமிட்டனர்.

சுல்தான் ஷராபுடீன் இட்ரிஸ் ஷாவை அவமதிக்கும் வகையில் திரு. சையத், Twitter-ரில் கருத்துக் கூறியுள்ளதாகப் பேரணி ஏற்பாட்டாளர்கள் கூறினர்.

சுல்தான் தமது வார்த்தைகள் குறித்து கவனமாக இருக்க வேண்டுமென்றும், மலேசியா பற்றி எரிந்தால் எல்லாருமே பாதிக்கப்படுவார்கள் என்றும் திரு. சையத் அதில் குறிப்பிட்டதாக ஏற்பாட்டாளர்கள் கூறினர்.

முன்னதாக சுல்தான், டாக்டர் மகாதீரின் கோபம் நாட்டையே எரித்துவிடும் என்று கூறியதற்கு பதிலளிக்கும் வகையில் திரு. சையத் அவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் குறிப்பு, இன்றைய பேரணியில் வாசிக்கப்பட்டது.

சுல்தானின் பூகிஸ் இனக் குழுப் பின்னணி பற்றி, அக்டோபரில், டாக்டர் மகாதீர் அவதூறாய்ப் பேசியதாகக் கூறப்படுவது பற்றியும் பேரணியில் பங்கேற்றோர் சினமடைந்துள்ளனர்.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்