Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

இஸ்ரேலுடன் இணைத்துக் கூறப்படும் தகவல்களை மறுத்துள்ளது McDonalds மலேசியா

McDonalds மலேசியாவை புறக்கணிப்பதற்கான அழைப்பு ஏமாற்றமளிப்பதாகக் கூறிய நிர்வாகம், இஸ்ரேலுடன் தன்னை இணைத்துக் கூறப்படும் தகவல்கள் அனைத்தும் பொய் என்பதை வலியுறுத்தியது. 

வாசிப்புநேரம் -
இஸ்ரேலுடன் இணைத்துக் கூறப்படும் தகவல்களை மறுத்துள்ளது McDonalds மலேசியா

(படம்: AFP/Jimin Lai)

மலேசியாவில் McDonalds உணவகத்தை புறக்கணிக்குமாறு ஆங்காங்கே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலுக்கு நிதியுதவி அளித்து வருவதாக அதன்மீது சிலர் குற்றஞ்சாட்டி வருவது அதற்குக் காரணம்.

அதுபற்றிக் கருத்துரைத்த McDonalds மலேசியா நிறுவனம், Facebook பக்கத்தில், மலாய் மொழியில் அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

McDonalds மலேசியாவை புறக்கணிப்பதற்கான அழைப்பு ஏமாற்றமளிப்பதாகக் கூறிய நிர்வாகம், இஸ்ரேலுடன் தன்னை இணைத்துக் கூறப்படும் தகவல்கள் அனைத்தும் பொய் என்பதை வலியுறுத்தியது.

மேலும், இஸ்ரேலின் தலைநகராக ஜெருஸலத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்ததன் தொடர்பில், மலேசியர்களும் உலக முஸ்லிம்களும் அடைந்திருக்கும் ஏமாற்றத்தைத் தங்களால் உணர்ந்துகொள்ள முடிவதாக, McDonalds மலேசியாவின் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

அத்துடன், McDonalds மலேசியா நிறுவனம் முழுவதும் மலேசியர்களுக்குச் சொந்தமானது என்பதையும், அதன் ஆக அதிகமான பங்குகளைக் கொண்டிருப்போர் முஸ்லிம்கள் என்பதையும், அது தெளிவுபடுத்தியது.
  
விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்