Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

மராவி மோதலில் மலேசியாவைச் சேர்ந்த கிளர்ச்சித் தலைவர் கொலை - டுட்டார்ட்டே

பிலிப்பீன்ஸ் அதிபர் ரொட்ரிகோ டுட்டார்ட்டே, மராவி நகரில் நடந்த மோதலில் மலேசியாவைச் சேர்ந்த கிளர்ச்சித் தலைவர் கொல்லப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ளார்.

வாசிப்புநேரம் -
மராவி மோதலில் மலேசியாவைச் சேர்ந்த கிளர்ச்சித் தலைவர் கொலை - டுட்டார்ட்டே

படம்: AFP/Noel Celis

பிலிப்பீன்ஸ் அதிபர் ரொட்ரிகோ டுட்டார்ட்டே, மராவி நகரில் நடந்த மோதலில் மலேசியாவைச் சேர்ந்த கிளர்ச்சித் தலைவர் கொல்லப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ளார்.

நேற்று முன் தினம் இரவு நடந்த மோதலில் ஐ.எஸ். அமைப்புடன் தொடர்புடைய 13 கிளர்ச்சியாளர்கள் மாண்டனர்.

அவர்களில் மாமுட் பின் அமாட்டும் ஒருவர். மோதலில் அவர் கொல்லப்பட்டிருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று ராணுவம் கூறியதையடுத்து அதிபர் டுடார்ட்டேயின் கருத்து வெளியானது.

துருப்பினர் தற்போது மாண்ட மாமுட்டின் சடலத்தைத் தேடி வருவதாகக் கூறப்பட்டது. மாமுட் பின் அமாட் (Mahmud bin Ahmad) மலேசியாவில் அதிகம் தேடப்பட்ட நபர்களில் ஒருவர்.

தென் கிழக்காசியாவில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் பிரிவுக்குத் தலைமைப் பொறுப்பை அவர் ஏற்கலாம் என்று கருதப்பட்டது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்