Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

இந்தியா: 9 புதிய அமைச்சர்களை நியமிக்கவிருக்கும் மோடி

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இன்று புதிதாக 9 அமைச்சர்களை நியமிக்கவிருக்கிறார்.

வாசிப்புநேரம் -
இந்தியா: 9 புதிய அமைச்சர்களை நியமிக்கவிருக்கும் மோடி

(கோப்புப்படம்: Reuters)

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இன்று புதிதாக 9 அமைச்சர்களை நியமிக்கவிருக்கிறார்.

அமைச்சரவை மாற்றத்தின் ஒரு அங்கமாகத் திரு. மோடி அந்த நியமனங்களை அறிவிப்பார் என்று கூறப்பட்டது.

மாநிலத் தேர்தல்களில் பாரதிய ஜனதா கட்சியின் செல்வாக்கை உயர்த்துவதும், 2019ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு முன்னர் கட்சியை வலுப்படுத்துவதும் அதன் நோக்கம்.

புதிய அமைச்சர்களுக்கு வழிவிட்டு 6 அமைச்சர்கள் பதவி விலகியதாக இந்தியத் தகவல்கள் கூறின.

தற்காப்பு, ரயில்துறை ஆகியவற்றுக்கு இன்று புதிய அமைச்சர்கள் அறிவிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய அமைச்சர்கள் இந்திய நேரப்படி இன்று காலை 10 மணிக்குப் பதவியேற்பர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்