Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

மலேசியா: விவசாயிகளைக் கவர நஜிப் அறிவித்துள்ள புதிய பெருந்திட்டம்

மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக் நில உரிமையாளர்களுக்கு அனுகூலமளிக்கும் மிகப் பெரிய சலுகைத் திட்டம் ஒன்றை அறிவித்துள்ளார்.

வாசிப்புநேரம் -
மலேசியா: விவசாயிகளைக் கவர நஜிப் அறிவித்துள்ள புதிய பெருந்திட்டம்

(கோப்புப்படம்: Today)

மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக் நில உரிமையாளர்களுக்கு அனுகூலமளிக்கும் மிகப் பெரிய சலுகைத் திட்டம் ஒன்றை அறிவித்துள்ளார்.

அரசாங்க நில மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு, அடுத்த மாத இறுதியிலிருந்து ஒரு சிறு தொகை ரொக்கமாக வழங்கப்படும். மேலும் அவர்கள் வாங்கியிருக்கும் கடனில் ஒரு பகுதியைத் திருமபச் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.

அதற்கான 1.6 பில்லியன் ரிங்கிட் தொகுப்புத் திட்டம் குறித்துத் திரு நஜிப் அறிவித்தார்.

அரசாங்க நில மேம்பாட்டு ஆணையம் பல்வேறு நிதி மோசடிக் குற்றச்சாட்டுகளைச் சந்தித்துவருகிறது. அதனால் அதன் பங்கு விலைகள் வெகுவாகச் சரிந்துள்ளன. அது, விவசாயிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஆணையத்தின் உதவித் திட்டங்கள் சரிவரச் சென்று சேரவில்லை என்ற குறைகூறல்களும் தொடர்கின்றன. இவ்வேளையில், புதிய திட்டம் குறித்துத் திரு நஜிப் அறிவித்துள்ளார்.

மலேசியத் தேர்தல் நெருங்கிவரும் வேளையில், மக்களின் ஆதரவைப் பெறும் நடவடிக்கைகளில் திரு நஜிப் முனைப்பாக இருங்கியிருப்பதாகக் கவனிப்பாளர்கள் கூறுகின்றனர். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்