Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

கொள்ளை நோயாக உருவெடுக்குமா புது வகை பறவைக் காய்ச்சல்?

சீனாவில் பரவிவரும் புது வகையான பறவைக் காய்ச்சல் கிருமி, உலக அளவில் கொள்ளை நோயாக உருவெடுக்கலாம் என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

வாசிப்புநேரம் -
கொள்ளை நோயாக உருவெடுக்குமா புது வகை பறவைக் காய்ச்சல்?

படம்: AFP/Jimin Lai

சீனாவில் பரவிவரும் புது வகையான பறவைக் காய்ச்சல் கிருமி, உலக அளவில் கொள்ளை நோயாக உருவெடுக்கலாம் என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

காற்றின் மூலம் பரவுவதால், அது பெரும் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று பரிசோதனை முடிவுகள் காட்டுகின்றன.

இந்த ஆண்டு முற்பகுதியில் H7N9 ரகப் பறவைக் காய்ச்சலால் மாண்ட நோயாளியிடமிருந்து கிருமி-மாதிரியைப் பெற்று அமெரிக்க, ஜப்பானிய ஆய்வாளர்கள் ஆய்வு நடத்தினர்.

Ferret எனப்படும் மர நாய்களிடம் அந்தக் கிருமியைக் கொண்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அதன் முடிவில், தும்மல் அல்லது இருமல் மூலம் காற்றில் பரவும் திறன் அந்தக் கிருமிக்கு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்