Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

மலேசியா: வட கொரியாவில் புதிய தூதரை நியமிக்கத் திட்டமில்லை

வட கொரியாவில் இருந்து தனது தூதரை இவ்வாண்டுத் தொடக்கத்தில் மீட்டுக்கொண்ட மலேசியா, மற்றொரு தூதரை நியமிக்கத் திட்டம் ஏதும் இல்லை என்று கூறியிருக்கிறது.

வாசிப்புநேரம் -
மலேசியா: வட கொரியாவில் புதிய தூதரை நியமிக்கத் திட்டமில்லை

மலேசிய வெளியுறவு அமைச்சர் அனிஃபா அமான். படம்: AFP/Mohd RASFAN

வட கொரியாவில் இருந்து தனது தூதரை இவ்வாண்டுத் தொடக்கத்தில் மீட்டுக்கொண்ட மலேசியா, மற்றொரு தூதரை நியமிக்கத் திட்டம் ஏதும் இல்லை என்று கூறியிருக்கிறது.

வடகொரியாவுடனான பதற்றநிலை அதிகரித்ததைத் தொடர்ந்து, மலேசியா அதன் தூதரை மீட்டுக்கொண்டது.

வடகொரியாவுடனான அரசதந்திர உறவுகள் தொடர்பான விவகாரங்களைக் கவனித்துக் கொள்ளும்படி சீனத் தலைநகர் பெய்ச்சிங்கில் இருக்கும் தூதரகத்தைத் தாம் கேட்டுக்கொள்ளக் கூடும் என்று மலேசிய வெளியுறவு அமைச்சர் அனிஃபா அமான் (Anifah Aman) கூறினார்.

வெளியுறவு தொடர்பாக, சரவாக்கில் நடைபெற்ற கலந்துரையாடலில், அவர் அவ்வாறு சொன்னார்.

வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னின் ஒன்றுவிட்ட சகோதரர், கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் கடந்த ஃபிப்ரவரி மாதத்தில் கொலை செய்யப்பட்டார்.

அதன் பிறகு, மலேசியாவுக்கும் வடகொரியாவுக்கும் இடையிலான உறவு கசப்படையத் தொடங்கியது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்