Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

பினாங்கு நிலச்சரிவில் 4 பேர் மரணம்

மலேசியாவின் பினாங்கு மாநிலத்திலுள்ள ஜார்ச்டவுன் நகரில் கட்டுமானத் தளம் ஒன்றில் நேர்ந்த நிலச்சரிவில் 20 பேர் வரை சிக்கிக்கொண்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

வாசிப்புநேரம் -
பினாங்கு நிலச்சரிவில் 4 பேர் மரணம்

படம்: Bernama/Channel NewsAsia

மலேசியாவின் பினாங்கு மாநிலத்திலுள்ள  ஜார்ச்டவுன் நகரில் கட்டுமானத் தளம் ஒன்றில் நேர்ந்த நிலச் சரிவில் வெளிநாட்டு ஊழியர் மூவர் மாண்டனர்; மேலும் 10 பேரக் காணவில்லை.

தஞ்சோங் புங்கா (Tanjung Bungah) வட்டாரத்தின் லெங்கோக் லெம்பா பெர்மாய்  (Lengkok Lembah Permai )பகுதியில் அந்தக் கட்டுமானத்தளம் அமைந்துள்ளது.

இன்று காலை 9 மணியளவில் சம்பவம் குறித்துத் தகவல் கிடைத்ததாகப் பினாங்கு தீயணைப்பு மீட்புத் துறைப் பேச்சாளர் கூறினார்.

சுமார் 10 மீட்டருக்கு மண் சரிந்திருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இன்று காலை 11 மணியளவில் இருவர் உயிருடன் மீட்கப்பட்டனர். அவர்கள் பினாங்கு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

சம்பவ இடத்தில், குடிமைத் தற்காப்புப் படையினரும், காவல்துறையினரும் இணைந்து தேடல் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்பட்டது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்