Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

'மகனாக இருந்தாலும் கொல்ல உத்தரவிடுவேன்'-பிலிப்பீன்ஸ் அதிபர் டுடார்ட்டே

'மகனாக இருந்தாலும் கொல்ல உத்தரவிடுவேன்'-பிலிப்பீன்ஸ் அதிபர் டுடார்ட்டே

வாசிப்புநேரம் -
'மகனாக இருந்தாலும் கொல்ல உத்தரவிடுவேன்'-பிலிப்பீன்ஸ் அதிபர் டுடார்ட்டே

(பிலிப்பீன்ஸ் அதிபர் டுடார்ட்டேயின் மகன் பாவ்லோ (இடது), அதிபர் டுடார்ட்டே (வலது) படம்: AFP/Reuters)


பிலிப்பீன்ஸில் அதிபர் ரொட்ரிகோ டுட்டார்டே சர்வாதிகாரம் செய்கிறார் என்று கூறி மக்கள் ஆரப்பாட்டப் பேரணி நடத்தியுள்ளனர்.

அதில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். பிலிப்பீன்ஸில் திரு டுடார்ட்டே பதவியேற்றது முதல், போதைப் பொருள் குற்றச்சாட்டின் கீழ் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.

மற்றொருபுறம் அவரது ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் திரண்டு, அவரது நடவடிக்கைகள் பிலிப்பீன்சுக்குப் புத்துயிர் அளிக்கும் என்று குரல் எழுப்பினர்.

தற்போது திரு டுடார்ட்டேயின் மகன் பாவ்லோ, போதைப் பொருள் கடத்தல் குற்றச்சாட்டை எதிர்நோக்குகிறார்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், மகனைக் கொல்ல உத்தரவிடுவேன்; அதற்கு நிச்சயம் தயங்கமாட்டேன் என்று திரு டுடார்ட்டே திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கிறார்.

அப்படி ஒருவேளை நடந்தால், திரு பாவ்லோவைக் கொல்லும் காவல் அதிகாரிகளுக்குப் பாதுகாப்பு அளிக்கப்படும் என்றும் அவர் சொன்னார்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்