Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

'மியன்மார் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையை சூச்சி முடிவுக்குக் கொண்டுவருவார்': பிரிட்டன் நம்பிக்கை

'மியன்மார் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையை சூச்சி முடிவுக்குக் கொண்டுவருவார்': பிரிட்டன் நம்பிக்கை

வாசிப்புநேரம் -
'மியன்மார் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையை சூச்சி முடிவுக்குக் கொண்டுவருவார்': பிரிட்டன் நம்பிக்கை

(படம்: REUTERS/Mohammad Ponir Hossain)

மியன்மாரின் அரசாங்க ஆலோசகரும் மூத்த தலைவருமான திருவாட்டி ஆங் சான் சூச்சி, அவரது தலைசிறந்த பண்புகளைக் கொண்டு ரொஹிஞ்சா முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையை முடிவுக்குக்கொண்டுவருவார்; அதில் நம்பிக்கை உள்ளது என்று பிரிட்டன் தெரிவித்திருக்கிறது.

ரக்கைன் மாநிலத்தில் உள்ள சிறுபான்மை முஸ்லிம்களில் பல்லாயிரம் பேர், வன்முறைக்கு அஞ்சி, நாட்டை விட்டு வெளியேறுகின்றனர்.

ரொஹிஞ்சா கிளர்ச்சியாளர்களை ஒடுக்கும் நடவடிக்கையில் மியன்மார் அரசாங்கம் அங்குள்ள மக்களையும் துன்புறுத்துவதாகக் கூறப்படுகிறது.

இதுவரை சுமார் 58,000 பேர் அண்டை நாடான பங்களாதேஷில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

ரொஹிஞ்சா இனத்தவர் நடத்தப்படும் விதம் மியன்மாரின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும்படி இருப்பதாக, பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் போரிஸ் ஜான்சன் சொன்னார்.

திருவாட்டி சூச்சியால் நாட்டை ஒன்றுபடுத்தமுடியும் என்றார் அவர்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்