Images
  • Thai-China HSRail (1)
    (படம்: AFP /Nicolas Asfouri)

தாய்லந்தில் அதிவேக ரயில் திட்டம்: முதற்கட்டப் பணிகள் அடுத்த மாதம் தொடக்கம்

தாய்லந்தும், சீனாவும், அதிவேக ரயில் திட்டத்தின் தொடர்பில் இரண்டு குத்தகைகளில் கையெழுத்திட்டுள்ளன.

அவ்விரு குத்தகைகளும் சுமார் 157 மில்லியன் டாலர்  மதிப்புமிக்கவை என்று தாய்லந்து அரசாங்க ரயில்துறை கூறியது.

சீனாவில் BRICS உச்சநிலை மாநாடு நடைபெறும் வேளையில், அந்தக் குத்தகைகள் கையெழுத்தாயின.

திட்டத்தின் முதற்கட்டம் அடுத்த மாதம் தொடங்கும்.

250 கிலோமீட்டர் தூரம் கொண்ட ரயில்பாதை பேங்காக்கையும், வடகிழக்கு மாநிலமான நக்கோன் ரட்சசிமாவையும் (Nakhon Ratchasima) இணைக்கும்.

2021ஆம் ஆண்டு ரயில்சேவை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த அதிவேக ரயில் திட்டம், சீனாவின் "இணைப்பும் பாதையும்" திட்டத்தின் ஓர் அங்கம் என்று கூறப்பட்டது.

உங்கள் கருத்து

Top