Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

ஊபர் நிறுவனத்தின் கனவு நனவாக உள்ளது

இவ்வட்டாரத்தில் முத்திரை பதிக்க வேண்டும் என்ற ஊபர் நிறுவனத்தின் கனவு நனவாக உள்ளது. 

வாசிப்புநேரம் -
ஊபர் நிறுவனத்தின் கனவு நனவாக உள்ளது

கோப்புப் படம்: REUTERS/Toby Melville/Illustration

இவ்வட்டாரத்தில் முத்திரை பதிக்க வேண்டும் என்ற ஊபர் நிறுவனத்தின் கனவு நனவாக உள்ளது.

ஆசியச் சந்தையில், அந்நிறுவனம் அதன் 7ஆவது ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

இவ்வட்டாரத்தில் தனது பெயரை நிலைநாட்டவேண்டும், கட்டுப்பாடுகளை எதிர்கொள்ளவேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளது ஊபர்.

இம்முறை, தாய்லந்தின் ஹோவா நிறுவனத்துடன் ஊபர் நிறுவனம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

ஹோவா தாய்லந்தின் ஆகப் பெரிய டாக்சி நிறுவனம். அதனுடனான ஒப்பந்தத்தால், பேங்காக்கில் செயல்பட்டுவரும் 4,000 டாக்சிகள் ஊபர் நிறுவனத்தின் கார்ப் பகிர்வு திட்டத்தில் இணையலாம்.

உள்ளூர் விதிமுறைகளுக்கு ஏற்பச் செயல்படுவதை உறுதிசெய்ய, அந்தந்த நாடுகளின் அரசாங்கங்களுடன் இணைந்து பணியாற்றுவதாக ஊபர் சொன்னது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்