Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

வியட்நாமின் வேளாண் துறைக்குப் பொலிவூட்டும் தனியார் நிறுவனங்கள்

வியட்நாமின் வேளாண் துறை நீண்டகாலமாகவே குறைவான உற்பத்தித்திறன், மோசமான பாதுகாப்புத் தரம், முதலீட்டுப் பற்றாக்குறை ஆகியவற்றால் சிரமப்பட்டு வருகிறது. 

வாசிப்புநேரம் -
வியட்நாமின் வேளாண் துறைக்குப் பொலிவூட்டும் தனியார் நிறுவனங்கள்

படம்: Reuters

வியட்நாமின் வேளாண் துறை நீண்டகாலமாகவே குறைவான உற்பத்தித்திறன், மோசமான பாதுகாப்புத் தரம், முதலீட்டுப் பற்றாக்குறை ஆகியவற்றால் சிரமப்பட்டு வருகிறது.

அந்த நிலையை மாற்றி வேளாண் துறைக்குப் பொலிவூட்ட முனைகின்றன அங்குள்ள தனியார் நிறுவனங்கள்.

வியட்நாம் வேளாண் துறையில் நீண்ட காலமாகப் பிரச்சினை நீடிக்கிறது. விலை குறைவு, அதிக இலாபம் ஈட்ட முடியுமா என்ற அச்சம் இப்படிப் பல காரணங்கள்.

விவசாயம் செய்யும் எளிய மக்களின் கவலை இப்போது மாறிவருகிறது. வியட்நாமின் ஆகப்பெரிய நிறுவனங்கள் சில வேளாண் துறைக்குப் புத்துயிரூட்ட முயல்கின்றன. 

ஈராண்டுகளுக்கு முன் வேளாண் துறையில் அடியெடுத்து வைத்த Vingroup குழுமம் இரண்டு விதமான திட்டங்களில் முதலீடு செய்கிறது.

ஒன்று நாடு முழுதும் உள்ள பெரிய பண்ணைகளை ஒருங்கிணைப்பது.

இரண்டாவது விவசாயிகளுக்கு உதவும் வகையில் வேளாண் உற்பத்தியில் உயர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்