Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

அரிக்கும் கண்களில் 100க்கும் மேற்பட்ட ஒட்டுண்ணிகள்

கடந்த ஈராண்டுகளாகக் கண் அரிப்பால் அவதியுற்று வந்தார் சீன மாது ஒருவர். மருத்துவப் பரிசோதனையின்போது அவரது இமை முடியில் 100க்கும் மேற்பட்ட ஒட்டுண்ணிகள் இருப்பது தெரியவந்தது.

வாசிப்புநேரம் -
அரிக்கும் கண்களில் 100க்கும் மேற்பட்ட ஒட்டுண்ணிகள்

படம்: Weibo

கடந்த ஈராண்டுகளாகக் கண் அரிப்பால் அவதியுற்று வந்தார் சீன மாது ஒருவர். மருத்துவப் பரிசோதனையின்போது அவரது இமை முடியில் 100க்கும் மேற்பட்ட ஒட்டுண்ணிகள் இருப்பது தெரியவந்தது.

முதல் முதலாக கண்கள் அரிக்கத் தொடங்கியபோது 62வயது மாது கடைகளிலிருந்து கண்களுக்கான சொட்டு மருந்து வாங்கிப் பயன்படுத்தினார்.

முதலில் நிவாரணம் அளித்த சொட்டு மருந்து ஒரு மாதத்திற்குப் பின்னர் எந்தப் பலனையும் தரவில்லை.

கடந்த மாதம் தமது கண்களிலிருந்து வெளியாகும் ஒருவிதத் திரவம் அதிகரித்ததைக் கண்டார் மாது.

திரவம் காய்ந்தபின், இமை முடிகள் ஒன்றோடொன்று ஒட்டிக்கொண்டு கண்களைத் திறந்து மூடச் சிரமப்பட்டார் அவர்.

கவலையடைந்த குடும்ப உறுப்பினர்கள் மாதை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவ பரிசோதனையில் இமை முடியில் ஒட்டுண்ணிகள் இருப்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர்.

சுகாதாரமான பழக்க வழக்கங்களைக் கடைப்பிடிக்காமல் இருந்ததே அவரது பிரச்சினைக்குக் காரணமென மருத்துவர்கள் நம்புகின்றனர்.

மாதின் தலையணை உறை, கிட்டத்தட்ட நாலைந்து ஆண்டுகளாகத் துவைக்கப்படவில்லை.

அவரது படுக்கையறையும் போதுமான காற்றோட்டமும் வெளிச்சமும் இல்லாமல் இருந்தது.

மாற்றப்படாத தலையணை உறையிலிருந்தே கிருமித் தொற்று தொடங்கியிருக்கலாமென மருத்துவர்கள் குறிப்பிட்டனர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்