Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

செலவைக் குறைக்க சுலபமான வழிகள்

மனம் ஒரு நிலையாக இருக்காது. பகட்டான பொருளைப் பார்த்தால், நம்மைப் பாடாய்ப்படுத்தும். அதைக் கட்டுப்படுத்த (செலவையும்) நிபுணர்கள் கூறும் சில வழிகள்..இதோ:

வாசிப்புநேரம் -

மனம் ஒரு நிலையாக இருக்காது. பகட்டான பொருளைப் பார்த்தால், நம்மைப் பாடாய்ப்படுத்தும். அதைக் கட்டுப்படுத்த (செலவையும்) நிபுணர்கள் கூறும் சில வழிகள்..இதோ:


• வாங்கப் போகும் பொருளைப் பற்றி தீவிரமாக யோசனை செய்யுங்கள்.

(உங்களைக் கேட்டுக்கொள்ளவேண்டியது - “தேவையா? தேவையா?”)

• ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் உங்கள் நிதியை மறுஆய்வு செய்வதை வழக்கமாகக் கொள்ளுங்கள். 

(உங்களைக் கேட்டுக்கொள்ளவேண்டியது – “வரவுக்குத் தகுந்த செலவா? மாற்றம் தேவையா?”)

• அடுத்தவர் செய்யும் செலவோடு அல்லது அடுத்தவர் வாங்கும் பொருளோடு ஒருபோதும் ஒப்பிடவேண்டாம் என்கின்றனர் நிபுணர்கள்.

(உங்களைக் கேட்டுக்கொள்ளவேண்டியது – “நமது தேவை என்ன?”)

• சம்பளத்திலிருந்து ஒரு சிறு தொகையாவது, மாதாமாதம் ஒதுக்கப்படுகிறதா என்பதை உறுதி செய்துக்கொள்ளுங்கள். 

(உங்களைக் கேட்டுக்கொள்ளவேண்டியது – “மாதாந்தரத் தொகையை ஒதுக்கி விட்டேனா?”)

• எல்லாவற்றிலும் சிக்கனமாக இருப்போம் என்பது ஓரிரு மாதங்களுடன் நின்றுவிடும். எனவே ஓர் அம்சத்தை எடுத்துக்கொண்டு (உதாரணமாக: வெளியில் சாப்பிடுவது) அதில் ஒரு குறிப்பிட்ட விழுக்காட்டைச் சேமிக்க முடிகிறதா என்று பாருங்கள்.

(உங்களைக் கேட்டுக்கொள்ளவேண்டியது – “இந்த மாதம் எதில் சிக்கனமாக இருந்தேன்?”)

நிபுணர்கள் யோசனையைப் பின்பற்றித்தான் பார்க்கலாமே!

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்