Images
  • 07 Jun MC
     சீனாவைச் சேர்ந்த மார்கரெட் சான் பட்டியலில் இடம்பெற்றார். (படம்: Reuters)

Forbes பட்டியலில் அதிக சீனப் பெண்மணிகள்

உலகின் ஆக அதிக வலிமைமிக்க பெண்கள் பட்டியலில் சீனப் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. Forbes சஞ்சிகை வெளியிட்ட பட்டியலில் ஜெர்மானியப் பிரதமர் Angela Merkel தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளார். அமெரிக்காவின் உத்தேசிய அதிபர் வேட்பாளர் திருவாட்டி ஹிலரி கிளிண்டன் (Hillary Clinton) இரண்டாம் இடத்தையும், மத்திய வங்கியின் தலைவர் ஜெனட் யெல்லன் (Janet Yellen) மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.

அமெரிக்கப் பெண்மணிகளில் 51 பேர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். அதை அடுத்து சீனப் பெண்களில் ஒன்பது பேரின் பெயர்கள் பட்டியலில் இடம்பெற்றன. இவ்வாண்டுப் பட்டியலில் இடம்பெற்ற பெண்களில் கிட்டத்தட்ட பாதிப்பேர் அமெரிக்காவைத் தவிர்த்து மற்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்று Forbes பெண்கள் சஞ்சிகைக் குறிப்பிட்டது. ஆசிய பெசிபிக் வட்டாரத்தில் இருந்து கால்வாசிப் பெண்கள் பட்டியலில் இடம்பிடித்தனர்.
ஆய்வு தொடங்கப்பட்டதிலிருந்து ஆசிய பெசிபிக் வட்டாரப் பெண்களில்

கால்வாசிப்பேர் பட்டியலில் இடம்பெற்றது இதுவே முதல் முறை.

உங்கள் கருத்து

Top