Images
  • oil

டிரம்ப் முன்னிலை - எண்ணெய்ச் சந்தையில் இறக்கம்

 எண்ணெய் விலைகள் புதன்கிழமை இறங்கின.நெருக்குதலான அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியைச் சேர்ந்தத் திரு டோனல்ட் டிரம்,எதிர்பாராத விதமாக முன்னிலை அடைந்துவருவதைத் தொடர்ந்து உலகச் சந்தைகள் எச்சரிக்கையுடன் உள்ளன.

கச்சா எண்ணெய் முன்பேரச் சந்தையில் விலைகள் பொதுவாக இறக்கம் கண்டுள்ளன.

ஐரோப்பிய ஒன்றியத்தைவிட்டு வெளியேற பிரிட்டிஷ் மக்கள் வாக்களித்தது போல் திரு டிரம்பின் முன்னிலை கவலைக்குரிய நிலையை ஏற்படுத்திவிட்டதாக Sumitomo நிறுவனத்தின் ஆய்வு நிலையத் தலைவர் போப் டக்காய் தெரிவித்தார்.

உங்கள் கருத்து

Top