Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

தங்க விலை இன்று சற்றுக் குறைந்துள்ளது

இந்தியா முழுவதும் 500, 1000 ரூபாய் நோட்டு செல்லாது என்ற பிரதமர் திரு. நரேந்திர மோடியின் அறிவிப்பையும், அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவையும் தொடர்ந்து அதிகரித்த தங்க விலை இன்று சற்றுக் குறைந்துள்ளது.

வாசிப்புநேரம் -

இந்தியா முழுவதும் 500, 1000 ரூபாய் நோட்டு செல்லாது என்ற பிரதமர் திரு. நரேந்திர மோடியின் அறிவிப்பையும், அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவையும் தொடர்ந்து அதிகரித்த தங்க விலை இன்று சற்றுக் குறைந்துள்ளது.

சிங்கப்பூரில் தங்க விலையில் அந்த அளவுக்கு மாற்றமில்லை என்று நகைக் கடைக்காரர்கள் கூறியுள்ளனர்.

தங்கத்தின் இன்றைய விலை சிங்கப்பூரில் கிராமிற்குச் சுமார் 56 வெள்ளி.

தங்க விலை உயர்வுக்கு ரூபாய் நோட்டுகள் குறித்த மத்திய அரசின் அறிவிப்பு, அமெரிக்க அதிபர் தேர்தல் ஆகியவையே காரணம் என நகை வியாபாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

சிங்கப்பூர் நகைக் கடைகளில் வியாபாரம் அதிகரிக்கவும் இல்லை, குறையவும் இல்லை.

வழக்கம்போலவே இருந்ததாகக் கடைக்காரர்கள் தெரிவித்தனர்.

ஆனால் இந்தியாவிலோ கதை வேறு.

பெரும்பாலான தங்கநகைக் கடைகளில் நேற்றிரவு விடிய விடிய தங்க விற்பனை சூடு பிடித்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

500, 1000 ரூபாய் நோட்டு செல்லாது என்பதால், இந்திய நாட்டினர் தங்களிடம் இருந்த ரூபாய் நோட்டுகளைத் தங்கமாக மாற்ற நகைக் கடைகளை நாடினர்.

எதிர்காலத்தில் மீண்டும் இவ்வாறு ரூபாய் நோட்டு செல்லாது என்று அறிவிக்கப்பட்டால் என்ன செய்வது என்பதற்காக, இருக்கும் நோட்டுகளைத் தங்கமாக மாற்றிக்கொள்ள அவர்கள் விரும்புகின்றனர்.

அவ்வாறு செய்வதால், நோட்டுகள் முதலீடாகின்றன; பாதிப்பு குறைகிறது என்றனர் வியாபாரிகள்.

தங்க விலையின் ஏற்ற இறக்கம் உலக நடப்புகளைப் பொறுத்தது என்றும் அவர்கள் குறிப்பிட்டனர். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்