Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

பொருளியல் வளர்ச்சி முன்னுரைப்பு குறைக்கப்பட்டது

DBS, Credit Suisse ஆகிய வங்கிகள், அடுத்த ஆண்டுக்கான சிங்கப்பூரின் பொருளியல் வளர்ச்சி முன்னுரைப்பைக் குறைத்திருக்கின்றன.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூர்: DBS, Credit Suisse ஆகிய வங்கிகள், அடுத்த ஆண்டுக்கான சிங்கப்பூரின் பொருளியல் வளர்ச்சி முன்னுரைப்பைக் குறைத்திருக்கின்றன. சிங்கப்பூரின் பொருளியல் வளர்ச்சி அடுத்த ஆண்டு ஒன்றரை விழுக்காடாக இருக்கும் என்று DBS சொன்னது.

வளர்ச்சி 2.1 விழுக்காடாக இருக்கும் என்று வங்கி ஏற்கனவே முன்னுரைத்திருந்தது. ஒருவேளை, வளர்ச்சி அந்த நிலையை எட்டினால், 2008-2009 உலகப் பொருளியல் நெருக்கடிக்குப் பின்னர், அதுவே ஆகக் குறைவான வளர்ச்சி விகிதமாக இருக்கும். உற்பத்தித்துறையின் பின்னடைவு தொடர்கிறது; அது மேம்படுவதற்கான சாத்தியங்கள் தென்படவில்லை என்று DBS சொன்னது.

வங்கி போன்ற சேவைத் துறைகளும் மெதுவடையலாம் என்று DBS முன்னுரைத்தது.
Credit Suisse வங்கி சிங்கப்பூரின் பொருளியல் வளர்ச்சி முன்னுரைப்பை 1.9 விழுக்காட்டிலிருந்து, ஒன்று புள்ளி ஏழு விழுக்காட்டுக்குக் குறைத்திருக்கிறது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்