Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

தனியார் துறையில் MyInfo சேவை

கடன் அட்டைகளை வெவ்வேறு வங்கிகளில் விண்ணப்பிக்கும் வாடிக்கையாளர்களுக்கு அடுத்த ஆண்டு முதல், சிரமங்கள் குறையலாம்.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூர்: கடன் அட்டைகளை வெவ்வேறு வங்கிகளில் விண்ணப்பிக்கும் வாடிக்கையாளர்களுக்கு அடுத்த ஆண்டு முதல், சிரமங்கள் குறையலாம்.

'சிங்பாஸ்' பயனீட்டாளர்கள், MyInfo சேவையில் ஏற்கனவே தங்கள் சொந்த விவரங்களை நிரப்பியிருந்தால், அவர்களின் விண்ணப்பம் மிக விரைவில் நிரப்பப்பட்டுவிடும்.
இந்தச் சேவையால், இணையம் வழி பணத்தை மற்றொரு கணக்கிற்கு மாற்ற விரும்பும் வாடிக்கையாளர்கள்  ஒவ்வொரு முறையும் தங்கள் விவரங்களைப் பதிவு செய்யத் தேவை இருக்காது.

இது சில அரசாங்கத் தளங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

'அறிவார்ந்த தேசம்' என்ற இலக்கைச் சிங்கப்பூர் கொண்டுள்ளது. அதற்கான முயற்சியில்  MyInfo அங்கம் வகிக்கிறது.

கடந்த ஆண்டு மே மாதம் தொடங்கப்பட்ட அதனை தற்போது சுமார் 200,000 பேர் பயன்படுத்துகின்றனர்.

DBS, OCBC, UOB, StanChart ஆகிய வங்கிகளில் MyInfo சேவையைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள், விண்ணப்பப் பாரம், இதர  தேவையான பாரங்களைச் சமர்ப்பிப்பதற்கான தேவையிருக்காது என்று கூறப்படுகிறது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்