Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

தானியங்கி வாகனமோட்டும் செயலியை முடக்கப்போவதில்லை: Tesla Motors

அமெரிக்கக் கார் உற்பத்தி நிறுவனமான Tesla Motors, தனது கார்களில் தானியங்கி வாகனமோட்டும் செயலியை முடக்கப்போவதில்லை என்று கூறியுள்ளது.

வாசிப்புநேரம் -

அமெரிக்கக் கார் உற்பத்தி நிறுவனமான Tesla Motors, தனது கார்களில் தானியங்கி வாகனமோட்டும் செயலியை முடக்கப்போவதில்லை என்று கூறியுள்ளது.

அண்மை விபத்துகள் அந்தச் செயல்திறனுடன் தொடர்புபடுத்தப்பட்டுவரும் நிலையில் நிறுவனம் அவ்வாறு தெரிவித்துள்ளது.

அதன் நிறுவனர் எலொன் முஸ்க் தமது நிறுவனத்தின் தொழில்நுட்பத்தைத் தற்காத்துப் பேசினார். 

ஃபுளோரிடா விபத்துதான் தானியங்கித் தொழில்நுட்பத்துடன் தொடர்புபடுத்தப்பட்ட முதல் விபத்து என்று அவர் குறிப்பிட்டார்.

இருப்பினும் அதன் செயல்பாட்டில் குறைகள் இருப்பதாகக் கவலை அதிகரித்துள்ளது. 

நின்றுகொண்டிருக்கும் வாகனங்களை உணரத் தவறுவதுடன், ஓட்டுநர்கள் தவறானதொரு பாதுகாப்பு உணர்வுடன் சாலைகளைக் கவனிக்காமல் இருக்கவும் அந்தத் தொழில்நுட்பம் காரணமாகிறது. 

அது மேம்படுத்தப்பட்ட சோதனை வடிவமே என்றும் இன்னும் அது முழுமை பெறவில்லை என்பதை மக்கள் நினைவில் கொள்ளவேண்டும் என்றும் திரு. முஸ்க் வலியுறுத்தினார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்