Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூரின் ஏற்றுமதியில் வீழ்ச்சி

சிங்கப்பூரின் ஏற்றுமதி, கடந்த மாதம், ஆண்டு அடிப்படையில், 1.2 விழுக்காடு குறைந்திருந்தது. தொடர்ந்து இரண்டாவது மாதமாக ஏற்றுமதி வீழ்ச்சி கண்டுள்ளது.

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரின் ஏற்றுமதியில் வீழ்ச்சி

(படம்: AFP)

சிங்கப்பூரின் ஏற்றுமதி, கடந்த மாதம், ஆண்டு அடிப்படையில், 1.2 விழுக்காடு குறைந்திருந்தது. தொடர்ந்து இரண்டாவது மாதமாக ஏற்றுமதி வீழ்ச்சி கண்டுள்ளது.

சிங்கப்பூரின் முக்கிய எண்ணெய் சாரா ஏற்றுமதி எதிர்பார்த்ததைக் காட்டிலும் குறைவாகவே வீழ்ச்சி கண்டது.

மின்னியல் பொருட்களின் ஏற்றுமதி அதிகரிப்பு காரணமாக, வீழ்ச்சியளவு குறைந்ததாக, IE சிங்கப்பூர் அமைப்பு சொன்னது.
ஏப்ரல் மாதத்திலும் சிங்கப்பூருக்கான ஏற்றுமதி, 0.8 விழுக்காடு குறைந்திருந்தது. மாதாந்தர அடிப்படையில், கடந்த மாத ஏற்றுமதி 8.1 விழுக்காடு வளர்ச்சி கண்டது. அதற்கு முந்தைய மாதம் அது 9 விழுக்காடு வீழ்ச்சி கண்டிருந்தது.

சென்ற மாதம், மின்னியல் ஏற்றுமதி 23.3 விழுக்காடு அதிகரித்தது.

ஏப்ரலில் அது 4. 8 விழுக்காடாக இருந்தது.
ஹாங்காங் தவிர சிங்கப்பூரின் 10 முன்னணிச் சந்தைகளுக்கான ஏற்றுமதி கடந்த மாதம் அதிகரித்தது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்