Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

M1-இன் லாபம் 2015 நான்காம் காலாண்டில் குறைந்தது

சிங்கப்பூரின் ஆகச் சிறிய தொலைத்தொடர்பு நிறுவனமான M1-இன் லாபம், கடந்த ஆண்டின் நான்காம் காலாண்டில் குறைந்திருந்தது.

வாசிப்புநேரம் -
M1-இன் லாபம் 2015 நான்காம் காலாண்டில் குறைந்தது

(படம் :M1)

சிங்கப்பூர்: சிங்கப்பூரின் ஆகச் சிறிய தொலைத்தொடர்பு நிறுவனமான M1-இன் லாபம், கடந்த ஆண்டின் நான்காம் காலாண்டில் குறைந்திருந்தது. கைபேசியைப் பயன்படுத்துவோரின் சராசரிக் கட்டணச் செலவு குறைந்ததே அதற்குக் காரணம் என்று நிறுவனம் சொன்னது.

சென்ற ஆண்டின் கடைசிக் காலாண்டில் அந்நிறுவனத்தின் லாபம், 43. 6 மில்லியன் வெள்ளி. ஓராண்டுக்கு முன்னருடன் ஒப்புநோக்க, அது, 2.1 விழுக்காடு குறைவு. மொத்த வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை, 5.1 விழுக்காடு அதிகரித்து, சுமார் 2 மில்லியன் ஆனது.
இருப்பினும், அன்றாடச் செயல்பாடுகளில் இருந்து கிடைக்கும் வருவாய், 11.1 விழுக்காடு குறைந்து, சுமார் 308 மில்லியன் வெள்ளியாக உள்ளது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்