Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டனின் வெளியேற்றத்தால் 'நிதி நெருக்கடி ஏற்படும் வாய்ப்பு குறைவு'

பிரிட்டன், , ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறினால், எத்தகைய தாக்கம் ஏற்படும் என்பது குறித்து  சிலர் கருத்துரைத்துள்ளனர்.

வாசிப்புநேரம் -

பிரிட்டன், , ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறினால், எத்தகைய தாக்கம் ஏற்படும் என்பது குறித்து சிலர் கருத்துரைத்துள்ளனர்.

பிரிட்டன், சுயமாகவே தனக்குப் பாதிப்பை ஏற்படுத்திக்கொள்ளக்கூடிய ஒரு நடவடிக்கை அதுவென்று, ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர், Shawn-Claud Yoonker எச்சரித்தார். ஐரோப்பியர்கள் எட்டுவதற்குப் பாடுபட்ட அனைத்துக்கும், அது பாதிப்பை ஏற்படுத்தலாம் என்றார் அவர்.

அமெரிக்க மத்திய வங்கியின் தலைவர் ஜேனட் யெல்லன் (Janet Yellen), அந்த முடிவு அமெரிக்காவில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்பதற்கான சாத்தியத்தை மறுக்கவில்லை. அத்தகைய முடிவால், அமெரிக்காவில் நிதி நெருக்கடி ஏற்படுவதற்கான வாய்ப்பில்லை என்றார் அவர்.

இருப்பினும், எதிர்காலம் எவ்வாறு அமையும் என்பது யாருக்கும் தெரியாது என்றும் திருவாட்டி யெல்லன் சொன்னார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்