Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

டாலர் மதிப்பு சரிந்தது

அமெரிக்க அதிபர் தேர்தல் பரபரப்பின் மத்தியில், அமெரிக்க பங்குச்சந்தைகள் தொடர்ந்து உயர்ந்து காணப்பட்டன. 

வாசிப்புநேரம் -
டாலர் மதிப்பு சரிந்தது

(படம்: REUTERS/Dado Ruvic/Illustration)

தோக்கியோ: அமெரிக்க அதிபர் தேர்தல் பரபரப்பின் மத்தியில், அமெரிக்க பங்குச்சந்தைகள் தொடர்ந்து உயர்ந்து காணப்பட்டன.

இதனால் உலகச் சந்தையில் டாலரின் மதிப்பு வலுவாக இருந்துவந்தது.

கடந்த 10 நாட்களில் டாலரின் மதிப்பு 5 விழுக்காடு உயர்ந்திருந்தது. கடந்த வெள்ளிக்கிழமை அது பதிமூன்றரை ஆண்டு காலம் காணாத உச்சத்தைத் தொட்டது.

திரு டிரம்பின் நிர்வாகம், பணவீக்கத்தைக் குறைக்கவும், செலவினத்தை அதிகரிக்கவும் வகை செய்யும் என்று முதலீட்டாளர்கள் உறுதியாக நம்பியதே அதற்குக் காரணம்.

ஆனால், இன்று ஜப்பானை உலுக்கியிருக்கும் வலுவான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, டாலரின் மதிப்பு சரிந்துள்ளது.

நேற்று டாலரின் மதிப்பு 111.36 யென்னாக இருந்தது.

இன்று அது 110.48 யென்னுக்குக் குறைந்துள்ளது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்