Images
  • 26Sep Etihad Airways warns against fake websites (1)
    இலவச விமானப் பயணச்சீட்டுகள் கொடுப்பதாகக் கூறும் போலி இணையப்பக்கங்களுக்கு எதிராக Etihad Airways நிறுவனம் எச்சரித்துள்ளது.

இலவச விமானச்சீட்டு வழங்கும் போலி இணையப் பக்கங்கள்

இலவச விமானப் பயணச்சீட்டுகள் கொடுப்பதாகக் கூறும் போலி இணையப்பக்கங்களுக்கு எதிராக Etihad Airways நிறுவனம் எச்சரித்துள்ளது.

அத்தகைய இணையப் பக்கங்களுக்கும் தமது நிறுவனத்துக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என அது அறிவித்தது.

கணக்கெடுப்பு ஒன்றில் பங்கெடுக்கவும், அதன் இணைய முகவரியை ஃபேஸ்புக் வாயிலாகப் பகிரவும் போலி இணையப் பக்கங்கள் அழைப்பு விடுக்கின்றன.

அதற்கு ஈடாக இலவச விமானச்சீட்டுகள் வழங்கப்படும் என அந்த இணையப் பக்கங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.

அத்தகைய விமானச்சீட்டுகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா என நிறுவனம் தெரிவித்தது.

போலி இணையப் பக்கங்களின் உரிமையாளர்கள் மீது வழக்கு தொடர்ந்துள்ளதாகவும் Etihad Airways நிறுவனம் கூறியது.

உங்கள் கருத்து

Top