Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிறிய, நடுத்தர சட்ட நிறுவனங்கள் மின்மயமாவதில் கூடுதல் உதவிகள்

குடியரசில் சிறிய, நடுத்தர சட்ட நிறுவனங்கள் மின்னிலக்கமயமாவதில் கூடுதல் உதவிகளைப் பெறவிருக்கின்றன.இன்று அறிமுகமான 2.8 மில்லியன் வெள்ளி நிதியுதவித் திட்டம் அதற்கு வகைசெய்யும்.

வாசிப்புநேரம் -

குடியரசில் சிறிய, நடுத்தர சட்ட நிறுவனங்கள் மின்னிலக்கமயமாவதில் கூடுதல் உதவிகளைப் பெறவிருக்கின்றன.இன்று அறிமுகமான 2.8 மில்லியன் வெள்ளி நிதியுதவித் திட்டம் அதற்கு வகைசெய்யும்.

சட்ட அமைச்சு, வழக்கறிஞர் சங்கம், ஸ்பிரிங் சிங்கப்பூர் ஆகியவை இணைந்து அந்தத் திட்டத்தைச் செயல்படுத்தும். மின்னிலக்க முறைக்கு மாறுவதில், சிறிய, நடுத்தர நிறுவனங்கள் போதிய வேகம் காட்டாததால், அண்மைத் திட்டம் அறிமுகமாகிறது.

புதிய நிதியுதவித் திட்டத்தின்கீழ், முதல் ஆண்டில் நிறுவனங்கள் தங்களுடைய நிர்வாகம், இணைய ஆய்வு தொடர்பான தொழில்நுட்பங்களுக்குச் செலவிடும் தொகையில் 70 விழுக்காட்டைத் திரும்பப் பெறமுடியும். தற்போது மிகக் குறைவான சட்ட நிறுவனங்களே, மின்னிலக்கம் சார்ந்த தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி வருகின்றன. அவற்றுக்கான செலவு அதிகம் என்பதை அதிகமான நிறுவனங்கள் சுட்டிவருகின்றன.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்