Images
  • 27Apr Apple revenue falls for first time since 2003 (1)
    தொழில்நுட்ப முன்னனி நிறுவனமான Apple, தனது காலாண்டு வருவாய் குறைந்திருப்பதாகக் கூறியிருக்கிறது. (படம்: Associated Press)

Apple நிறுவனத்தின் காலாண்டு வருவாய் குறைந்துள்ளது

தொழில்நுட்ப முன்னனி நிறுவனமான Apple, தனது காலாண்டு வருவாய் குறைந்திருப்பதாகக் கூறியிருக்கிறது.

கடந்த 13 ஆண்டுகளில் நிறுவனத்தின் வருவாய் குறைந்திருப்பது இதுவே முதல்முறை.

iPhone கைபேசிகளின் விற்பனையில் ஏற்பட்ட சரிவே அதற்குக் காரணம் என்று நிறுவனம் சொன்னது.

Apple நிறுவனத்தின் சென்ற காலாண்டு வருவாய் 50 பில்லியன் டாலர். அதற்கு முந்தைய காலாண்டைவிட அது 13 விழுக்காடு குறைவு.

சென்ற காலாண்டில் நிறுவனம் விற்பனை செய்த கைபேசிகளின் எண்ணிக்கை 51 மில்லியனைத் தாண்டியதாகக் கூறப்பட்டது.

ஓராண்டுக்கு முன்னர், விற்பனை 61 மில்லியனை எட்டியது.

சென்ற ஆண்டின் பிற்பகுதியில் சீனாவில் விற்பனை 26 விழுக்காடு சரிந்ததாக நிறுவனம் தெரிவித்தது.

பொருளியல் பிரச்சினைகளை எதிர்கொண்டாலும், நிறுவனத்தின் செயல்திறன் திருப்தி அளிப்பதாகச் சொன்னார், அதன் தலைமை நிர்வாகி Tim Cook.

திறன்பேசிகளின் விற்பனைச் சரிவு ஒட்டுமொத்தத் துறையையும் பாதித்துள்ளது; அடுத்த கட்ட புத்தாக்கம் என்ன என்பதை நிறுவனங்கள் தெளிவாக அறிவிக்காமல் இருப்பதே அதற்குக் காரணம் என்று தொழில்நுட்ப ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 

உங்கள் கருத்து

Top