Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

மீண்டும் விற்பனைக்கு வரவுள்ள சாம்சுங் கேலக்சி நோட் 7 கைத்தொலைபேசிகள்

சாம்சங் நிறுவனம் புதுப்பிக்கப்பட்ட கேலக்சி நோட் 7 ரகக் கைத்தொலைபேசிகளைச் சந்தையில் விற்பனைக்கு விடுக்கவுள்ளது.

வாசிப்புநேரம் -

சாம்சங் நிறுவனம் புதுப்பிக்கப்பட்ட கேலக்சி நோட் 7 ரகக் கைத்தொலைபேசிகளைச் சந்தையில் விற்பனைக்கு விடுக்கவுள்ளது.

சாம்சங் முன்பு தடை செய்த நோட் 7 கைத்தொலைபேசிகளை மீண்டும் புதுப்பித்த பிறகு விற்கப்போவதாகத் தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னர் சாம்சங் சுமார் 4 மில்லியன் நோட்  7 கைத்தொலைபேசிகளைப் பாதுகாப்புக் காரணங்களுக்காக மீட்டுக் கொண்டது.

அவற்றின் மின்கலம் சூடேறி தீப்பிடிக்க கூடும் என்ற அச்சத்தில் சாம்சங் அவ்வாறு செய்தது.

பல நாட்டு விமான நிறுவனங்கள், இந்தக் கைத்தொலைபேசிகளைச் சரக்குப் பகுதிக்குள் அனுப்பவும், கைப் பெட்டியில் எடுத்துச் செல்லவும் தடை விதித்துள்ளன. 

மேலும், சாம்சங் தனது சாதனங்களை மறுபயனீடு செய்து, சுற்றுப்புறத்திற்குக் கேடு விளைவிக்காமல் இருக்க சில முயற்சிகளை எடுத்து வருகிறது. 

புதுப்பிக்கப்பட்ட சாதனங்களின் விற்பனை, அதிகாரிகளுடன் கலந்தாலோசித்த பின்னர், உள்ளூர் தேவைக்கேற்ப தொடங்கும். 

Greenpeace சுற்றுப்புறப் பாதுகாப்பு அமைப்பு சாம்சங் நிறுவனத்தின் மறுபயனீட்டு முயற்சியை வரவேற்றுள்ளது. 

சாம்சங் நிறுவனத்தின் முயற்சிகளை மேற்கொண்டு கண்காணிக்கப் போவதாகவும் அது குறிப்பிட்டுள்ளது.


 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்