Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

MH17 விமான விபத்து- மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனம் மீது வழக்கு

MH17 விமான ஊழியர்களின் குடும்பத்தினர், ஒப்பந்த மீறல், கவனக்குறைவு போன்றவற்றுக்காக மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் மீது வழக்குத் தொடுத்துள்ளனர். 

வாசிப்புநேரம் -
MH17 விமான விபத்து- மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனம் மீது வழக்கு

MH17 விமான ஊழியர்களின் குடும்பத்தினர், ஒப்பந்த மீறல், கவனக்குறைவு போன்றவற்றுக்காக மலேசிய ஏர்லைன

MH17 விமான ஊழியர்களின் குடும்பத்தினர், ஒப்பந்த மீறல், கவனக்குறைவு போன்றவற்றுக்காக மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் மீது வழக்குத் தொடுத்துள்ளனர்.

கிழக்கு உக்ரேனில் ரஷ்யத் தயாரிப்பு ஏவுகணையால் அந்த விமானம் வீழ்த்தப்பட்டு கிட்டத்தட்ட ஈராண்டு கடந்த நிலையில் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.

அதில் பயணம் செய்த 298 பயணிகளும் விமான ஊழியர்களும் மாண்டனர்.

விமான நிறுவனத்தின் மீது சட்ட ரீதியிலான நடவடிக்கை ஜூலை 17-ம் தேதிக்குள் எடுக்கப்படவேண்டும் என்பதால் மேலும் வழக்குகள் தொடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்ற மாதம் ஆஸ்திரேலிய நிறுவனம் ஒன்று, விமானத்தில் பயணம் செய்த 33 பேரின் குடும்பங்களின் சார்பில், 330 மில்லியன் டாலர் இழப்பீடு கேட்டு ரஷ்யா மீதும், அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புட்டின் மீதும் வழக்குத் தொடுத்தது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்