Images
  • 31 Mar the sun rises

சிங்கப்பூர் வங்கிகளின் தரநிலையைக் குறைத்தது Moody’s

சிங்கப்பூர் : அமைப்புகளின் மதிப்பைக் கணிக்கும் நிறுவனமான Moody's, சிங்கப்பூரின் பெரும் வங்கிகளுக்கான தரநிலையைக் குறைத்திருக்கிறது.

நிலையான தரநிலை எனும் அவற்றின் மதிப்பீட்டை negative எனும் தரநிலைக்கு அந்நிறுவனம் குறைத்தது.
DBS வங்கி, DBS குழுமம், OCBC வாங்கி, UOB வாங்கி ஆகியவை பாதிக்கப்பட்ட வங்கிகள்.

சிங்கப்பூரில் வங்கிகள் இவ்வாண்டிலும் அடுத்த ஆண்டிலும் சவால்மிக்க சூழலை எதிர்நோக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தரநிலைக் குறைப்பு, அந்த எதிர்பார்ப்பைப் பிரதிபலிப்பதாக Moodys கூறுகிறது.

பொருளியல் வளர்ச்சி, பன்னாட்டு வர்த்தக வளர்ச்சி ஆகியவை மெதுவடையும் இந்நேரத்தில், வங்கிகள் கடன் கொடுப்பதைத் தொடர்ந்து குறைக்கும் என்று Moodys யூகிக்கிறது.

ஆயினும், சிங்கப்பூர் வங்கிகள் நிதி நெருக்கடிகளைச் சமாளிப்பதற்கான போதிய ஆயத்த நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக அந்நிறுவனம் சொன்னது. தற்போது DBS வங்கி, OCBC வாங்கி,UOB வாங்கி ஆகியவற்றுக்கு Moody's நிறுவனம் Aa1 தரநிலையைக் கொடுத்திருக்கிறது. DBS குழுமத்தின் தரநிலை Aa2.

உங்கள் கருத்து

Top