Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

அனைத்துலகப் பொறுப்புகளுக்காக 50 சிங்கப்பூரர்களுக்குப் பயிற்சி அளிக்கும் GSK

பிரிட்டனைச் சேர்ந்த பன்னாட்டு மருந்துத் தயாரிப்பு நிறுவனமான GSK எனப்படும் 'கிளாக்ஸோஸ்மித் க்லைன்' (GlaxoSmithKline), அனைத்துலகப் பொறுப்புகளுக்காக 50 சிங்கப்பூரர்களுக்குப் பயிற்சி அளிக்கவுள்ளது.

வாசிப்புநேரம் -
அனைத்துலகப் பொறுப்புகளுக்காக 50 சிங்கப்பூரர்களுக்குப் பயிற்சி அளிக்கும் GSK

(படம்: GSK)

சிங்கப்பூர்: பிரிட்டனைச் சேர்ந்த பன்னாட்டு மருந்துத் தயாரிப்பு நிறுவனமான GSK எனப்படும் 'கிளாக்ஸோஸ்மித் க்லைன்' (GlaxoSmithKline), அனைத்துலகப் பொறுப்புகளுக்காக 50 சிங்கப்பூரர்களுக்குப் பயிற்சி அளிக்கவுள்ளது.

GSK இன் அந்த முடிவு, தனது ஆசியத் திறனாளர் அணியை அதிகரிக்கும் நிறுவனத்தின் முயற்சியில் ஒரு பகுதி.

250 தனிநபர்களைக் கொண்டுள்ள அந்நிறுவனத்தின் ஆசியத் தலைமைத்துவத் திட்டத்தில் அந்தச் சிங்கப்பூரர்கள் சேர்வர்.

GSK நிறுவனத்தின் ஊழியரணியில் 100,000க்கும் மேற்பட்டோர் உள்ளனர்.
சிங்கப்பூரில் 1,600க்கும் மேற்பட்டோர் அந்நிறுவனத்தில் பணியாற்றுகின்றனர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்