Images
  • gold bar
    (படம்: AFP/BERTRAND GUAY)

தங்கத்துக்கான தேவை: 8 ஆண்டு காணாத சரிவு

உலகெங்கும் தங்கத்துக்கான தேவை 8ஆண்டில் இல்லாத அளவு சரிந்துள்ளது.

இந்த ஆண்டின் முதற்பாதியில் அது 14 விழுக்காடு குறைந்ததாகத் தங்கத்துக்கான அனைத்துலகச் சங்கம் கூறியது.

அமெரிக்க வர்த்தகர்கள் தங்கம் தொடர்பான முதலீடுகளிலிருந்து விலகிக்கொண்டதே அதற்குக் காரணம்.

அனைத்துலக அளவில், இந்த ஆண்டின் முதற்பாதியில் தங்கத்துக்கான தேவை ஈராயிரத்து-நான்கு டன் மட்டுமே.

நிச்சயமற்ற பொருளியல் காலத்தில், உத்தரவாதமிக்க முதலீடாகத் தங்கம் கருதப்படுகிறது.

டாலரின் மதிப்பு வலுவடைந்ததும் தங்கத்துக்கான தேவை சரிந்ததற்குக் காரணமாகக் கூறப்பட்டது.  

உங்கள் கருத்து

Top