Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

பொருளியல் வளர்ச்சி முன்னுரைப்பில் திருத்தம்

தனியார்துறைப் பொருளியல் வல்லுநர்கள் இவ்வாண்டு முழுமைக்குமான சிங்கப்பூர் பொருளியல் வளர்ச்சி முன்னுரைப்பைக் கீழ்நோக்கித் திருத்தியுள்ளனர்.

வாசிப்புநேரம் -
பொருளியல் வளர்ச்சி முன்னுரைப்பில் திருத்தம்

(கோப்புப்படம்: Reuters/Edgar Su)

தனியார்துறைப் பொருளியல் வல்லுநர்கள் இவ்வாண்டு முழுமைக்குமான சிங்கப்பூர் பொருளியல் வளர்ச்சி முன்னுரைப்பைக் கீழ்நோக்கித் திருத்தியுள்ளனர்.

சிங்கப்பூர் நாணய வாரியத்தின் காலாண்டு ஆய்வறிக்கை அதனைத் தெரிவித்தது.

இவ்வாண்டின் மூன்றாம் காலாண்டிலும் மொத்த உள்நாட்டு உற்பத்தி எதிர்பார்த்ததைவிட பலவீனமாய் இருந்தது.

சிங்கப்பூர் நாணய வாரியத்தின் நிபுணத்துவ முன்னுரைப்பாளர்கள் ஆய்வில் கலந்துகொண்ட பொருளியல் வல்லுநர்கள்
இவ்வாண்டு சிங்கப்பூரின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, ஒன்று புள்ளி நான்கு விழுக்காடு வளர்ச்சி காணும் என்று முன்னுரைத்தனர்.

இது செப்டம்பர் ஆய்வில் அவர்கள் முன்னுரைத்ததை விட பூஜ்யம் புள்ளி நான்கு விழுக்காடு குறைவு.

இவ்வாண்டின் மூன்றாம் காலாண்டில் சிங்கப்பூர் பொருளியல் ஒன்று புள்ளி ஏழு விழுக்காடு வளரச்சி காணும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது ஒன்று புள்ளி ஒரு விழுக்காடு மட்டுமே வளர்ச்சி கண்டது.

நாலாம் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி பூஜ்யம் புள்ளி எட்டு விழுக்காடு வளர்ச்சி காணும் என்று பொருளியல் வல்லுநர்கள் எதிர்பார்க்கின்றனர். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்