Images
  • propnex (1)
    (PropNex நிறுவனத்தின் இணையத்தளப் படம்)

சிங்கப்பூரின் ஆகப்பெரிய சொத்து முகவர் நிறுவனமாகும் PropNex

சொத்து முகவை நிறவனமான PropNex Realty, மற்றொரு சொத்து முகவர் நிறுவனமான DWG என்று அழைக்கப்படும் டென்னிஸ் வீ குழுமத்துடன் இணைந்துள்ளது.

DWG நிறுவனத்தின் சுமார் ஆயிரம் சொத்து முகவர்கள், PropNex நிறுவனத்துக்கு மாறவிருக்கின்றனர்.

அந்த இணைப்பைத் தொடர்ந்து, சிங்கப்பூரின் ஆகப் பெரிய சொத்து முகவை நிறுவனமாக PropNex திகழும்.

அதன்-கீழ், சுமார் 6,900 சொத்து முகவர்கள் சேவை வழங்குவர்.
அந்த வர்த்தக இணைப்பு, அடுத்த மாத இறுதிக்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

உங்கள் கருத்து

Top