Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூரில் வீட்டுக்கடன் வட்டி விகிதம் அதிகரிக்கலாம். காரணம்?

சிங்கப்பூரில் வீட்டுக்கடன் வட்டி விகிதம் இந்த ஆண்டு அதிகரிக்கலாம் 

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரின் குறைந்தபட்ச வீட்டுக்கடன் வட்டிவிகிதம் இந்த ஆண்டு இறுதியில் இரட்டிப்பாகலாம் என்கின்றனர் கவனிப்பாளர்கள். காரணம் என்ன?

அமெரிக்க மத்திய வங்கி இந்த ஆண்டு வட்டி விகிதத்தை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவில் வட்டி விகிதம் அதிகரித்தால், சிங்கப்பூர் நாணயத்துக்கு எதிரான அமெரிக்க நாணயத்தின் மதிப்பு அதிகரிக்கும்.
இதனால், Sibor எனப்படும் சிங்கப்பூர் வங்கிகளுக்கு இடையில் விதிக்கப்படும் வட்டி விகிதமும் அதிகரிக்கும். அதைச் சரிக்கட்ட, வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு விதிக்கும் வட்டி விகிதத்தை அதிகரிக்க வாய்ப்புண்டு என்கின்றனர் ஆய்வாளர்கள்.

பொருளியல் மந்தநிலையும், வேலையின்மையும் தொடரும் என்பதால், சொத்து உரிமையாளர்கள் மட்டுமின்றி, நிறுவனங்களும் தங்கள் கடனைத் திரும்பச் செலுத்துவதில் சிரமத்தை எதிர்நோக்கலாம் என்கின்றனர் அவர்கள்.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்