Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்டெல் நிதியாண்டு லாபம்: 3.85 பில்லியன் வெள்ளி

சிங்டெல் நிறுவனம் சென்ற ஆண்டுக்கான நிதி அறிக்கைகளை வெளியிட்டுள்ளது. 2016-2017 நிதியாண்டுக்கான நிகர லாபம் 3.85 பில்லியன் வெள்ளி என்று நிறுவனம் சொன்னது.

வாசிப்புநேரம் -

சிங்டெல் நிறுவனம் சென்ற ஆண்டுக்கான நிதி அறிக்கைகளை வெளியிட்டுள்ளது. 2016-2017 நிதியாண்டுக்கான நிகர லாபம் 3.85 பில்லியன் வெள்ளி என்று நிறுவனம் சொன்னது.

சென்ற நிதியாண்டை விட அது சற்று குறைவு (3.87 பில்லியன் வெள்ளி)

அதன் துணை நிறுவனமான இந்தியாவின் ஏர்டெல் நிறுவனத்தின் லாபத்தில் ஏற்பட்ட சரிவு, சிங்டெல்லையும் பாதித்தது. இல்லாவிடில், நிகர லாபம் 2 விழுக்காடு அதிகரித்திருக்கும் என்று கூறப்பட்டது. 

ஏர்ட்டெல் நிறுவனம் இந்தியாவில் கடும் போட்டியைச் சந்தித்துவருகிறது. 

"சவால்மிக்க வர்த்தகச் சூழலில் இந்தக் காலாண்டு நல்ல வருவாயை ஈட்டியிருக்கிறோம்; புத்தாக்கத் திட்டங்கள் புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்க பெருமளவு உதவியது" என்றார் சிங்டெல் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுவா சோக் கூங். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்