Images
  • Mahanati

நடிகை சாவித்திரி பற்றிய திரைப்படம் - ஜெமினி கணேசனாக நடிக்கும் துல்க்கர் சல்மான்

"ஓ கே கண்மணி" புகழ் துல்க்கர் சல்மான், "மகாநதி" திரைப்படத்தில், பழம்பெரும் நடிகர் ஜெமினி கணேசனாக நடிக்கவிருக்கிறார்.
நடிகை சாவித்திரியின் வாழ்க்கைக் கதையை "மகாநதி" திரைப்படம் சித்திரிக்கிறது.

தமிழிலும் தெலுங்கிலும் அந்தத் திரைப்படம் உருவாகிறது. துல்க்கர் சல்மானின் முதல் தெலுங்குத் திரைப்படமாக அது அமையும்.
ஜெமினி கணேசனின் கதாபாத்திரத்தை துல்க்கர் சல்மான் மிகத் துணிவுடன் ஏற்றுள்ளதாக பட இயக்குநர் நாக் அஷ்வின் புகழ்ந்தார்.

தமது கதாபாத்திரத்தை மட்டும் பாராது படக்கதைக்கு துல்க்கர் முக்கியத்துவம் கொடுத்திருப்பதை அந்த இயக்குநர் சுட்டினார்.
கீர்த்தி சுரேஷ் சாவித்திரியாக நடிக்கவுள்ளார்.

உங்கள் கருத்து

Top