Images
  • 01aug game of thrones (1)
    படம்: Todayonline

களவாடப்பட்ட பிரபல நாடகத் தொடர்: "Game of Thrones"

அமெரிக்காவின் HBO ஒளிவழி அதன் பிரபல நாடகத் தொடர்களில் ஒன்றான "Game of Thrones" ஊடுருவப்பட்டுள்ளதாகக் கூறியிருக்கிறது.

ஒளிபரப்பாகாத நாடகத்தின் பாகம் ஒன்றை ஊடுருவல்காரர்கள் களவாடியிருப்பதாக HBO சொன்னது.

கற்பனையின் அடிப்படையில் நாடகமாக்கப்பட்டுள்ளது "Game of Thrones".
நாடகம் ஏழாவது ஆண்டாக ஒளிபரப்பாகிறது. அடுத்த ஆண்டு அந்தத் தொடர் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

HBO, ஊடுருவல் சம்பவத்தில் அதன் தகவல்கள் சில களவாடப்பட்டதாகவும் அதன் ஊழியர்களுக்குத் தெரிவித்தது.

விசாரணை தொடவர்தாகக் கூறிய HBO மேற்கொண்டு கருத்துகளைத் தெரிவிக்க மறுத்துவிட்டது.

களவாடப்பட்ட ஒளிபரப்பாகாத நாடகத் தொடர்கள் சிலவற்றை ஊடுருவல்காரர்கள் இணையத்தளங்களில் வெளியிட்டதாகவும் செய்தி வெளியானது. 

உங்கள் கருத்து

Top