Images
  • 23 Nov Nayan

மலையாளத் திரையுலகில் நடிகைகளின் வயதைப் பார்ப்பதில்லை: நயன்தாரா

நீண்ட நாள் இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தமிழில் நடித்து வெற்றிநடை போட்டு வருகிறார் நயன்தாரா. ஆயினும் அவர் மீண்டும் மலையாளத் திரையுலகின் பக்கம் நோக்கிச் செல்வதாகக் கூறப்படுகிறது.

மலையாளத்தில் நடிகைகள் பலருக்குச் சற்று வயதானாலும் அவர்களுக்கு நல்ல பட வாய்ப்புகள் கிடைப்பதாக நயன்தாரா சுட்டியுள்ளதைத் தமிழக ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.

அதற்குக் காரணம், மலையாளத் திரைப்படங்கள் தமிழ்த் திரைப்படங்களைவிட கதைக்கும் கதாபாத்திரங்களுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுப்பதே என்று நயன்தாரா சொல்கிறார்.

நயன்தாராவுக்குத் தற்போது 32 வயது. இதுவரை அதிகமான மலையாளப் படங்களில் நடிக்காத நயன்தாரா இனி அந்தப் பக்கம் கவனம் செலுத்தவிருக்கிறார்.

உங்கள் கருத்து

Top