Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

கலையுலகம்

பிரபல கவிஞர் கவிக்கோ அப்துல் ரகுமான் காலமானார் (காணொளி)

தமிழகத்தின் பிரபல கவிஞரும், தமிழ்ப் பேராசிரியருமான கவிக்கோ அப்துல் ரகுமான் காலமானார். அவருக்கு வயது 80.

வாசிப்புநேரம் -

தமிழகத்தின் பிரபல கவிஞரும், தமிழ்ப் பேராசிரியருமான கவிக்கோ அப்துல் ரகுமான் காலமானார்.

அவருக்கு வயது 80.

மரபுக் கவிதையில் சிறந்து விளங்கிய அவர், புதுக்கவிதைத் துறையிலும் தம்மை நிலைநிறுத்திக்கொண்டு பல உள்ளங்களைக் கவர்ந்தவர்.

வாணியம்பாடி இஸ்லாமியக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணி புரிந்தவர் அவர்.
கவிக்கோ அப்துல் ரகுமான் 20 ஆண்டு தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றிய பிறகு 1991ஆம் ஆண்டு விருப்ப ஓய்வுபெற்றார்.

அவர் தமிழில் கவிதைக் குறியீடுகள் குறித்து ஆராய்ந்து முனைவர் பட்டம் பெற்றவர்.
தமிழில் ஹைக்கூ, கசல் ஆகிய பிறமொழி இலக்கியங்களைப் பரப்பியதிலும் திரு. அப்துல் ரகுமான் குறிப்பிடத்தக்கவர் ஆவார்.

கவிக்கோவுடனான தமது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார் பிரபல கவிஞரும் சிங்கப்பூர் கவிமாலை அமைப்பின் நிறுவனருமான பிச்சினிக்காடு இளங்கோ. 


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்