Images
  • 0308 money

$357 மில்லியனுக்கு என்ன வாங்கலாம்?

காற்பந்தாட்ட வீரர் நெய்மார் பார்சலோனா அணியை விட்டு விலகி பாரிஸ் செய்ண்ட் ஜெர்மேய்ன் அணியுடன் ஒப்பந்தமாவது பலரால் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

இதற்குமுன் எந்தக் காற்பந்தாட்ட வீரருக்கும் அளிக்கப்படாத தொகையான $357 மில்லியனுக்கு அவர் ஒப்பந்தமாகவிருப்பதாகக் கூறப்படுகிறது.

$357 மில்லயன்.

சாதாரணத் தொகையல்ல. இவ்வளவு பணம் இருந்தால் என்ன வாங்கலாம்?




- 23 ரோல்ஸ் ராய்ஸ் சுவெப்டெயில் கார்கள்

உலகில் ஆக விலை உயர்ந்த இந்தக் காரின் விலை சுமார் $15 மில்லியன். சொகுசாக வந்து போக 23 கார்கள் இருந்தால் நன்றாகத் தான் இருக்கும்.



- 88 முறை விண்வெளிக்குச் செல்லலாம்

விர்ஜின் கேலக்டிக் விண்வெளிப் பயணம் செல்ல கட்டணம் $340,000 தான். $357 மில்லயன் இருந்தால் உற்றார் உறவினர் எல்லோரையும் விண்வெளிக்கு அழைத்துச் செல்லலாமே.




- எஸ்பிளனேட் அரங்கின் ஒரு பாதியை வாங்கலாம்

இரு டுரியான்களைப் போல வடிவமைக்கப்பட்ட அரங்கத்தின் விலை $600 மில்லயன். அதில் ஒரு டுரியானை வாங்கிக்கொள்ளலாம்.




- இந்த ஓவியத்தை 3 முறை வாங்கலாம்

பிக்காசோவின் இந்த ஓவியத்தின் விலை $145 மில்லியன். இதை சுவரில் மாட்டி நாள்தோறும் அழகு பார்க்கலாம்.



- நியூயார்க்கின் மேன்ஹெட்டன் பகுதியில் 262 முறை காரை நிறுத்தலாம்

மேன்ஹெட்டன் பகுதியில் உள்ள 8 மாடி சொகுசுக் கட்டடத்தில் ஒரு நாளைக்குக் காரை நிறுத்த $1.36 மில்லியன் கட்டணம். காரை விட அதை நிறுத்தும் இடத்திற்குச் செலவு அதிகம்.

உங்கள் கருத்து

Top