Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

ஹாலிவுட் தயாரிப்பாளர் ஸ்டீவன் சீகல் மீது பாலியல் தொந்தரவுக் குற்றச்சாட்டு

ஹாலிவுட் தயாரிப்பாளர், நடிகர் ஸ்டீவன் சீகல் (Steven Seagal) தமக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக நடிகை போர்ட்டியா டி ரோசி (Portia de Rossi) குற்றஞ்சாட்டியிருக்கிறார்.

வாசிப்புநேரம் -

ஹாலிவுட் தயாரிப்பாளர், நடிகர் ஸ்டீவன் சீகல் (Steven Seagal) தமக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக நடிகை போர்ட்டியா டி ரோசி (Portia de Rossi) குற்றஞ்சாட்டியிருக்கிறார்.

பிரபலப் படைப்பாளர் எல்லன் டிஜெனரசை (Ellen DeGeneres) மணமுடித்துக்கொண்ட போர்ட்டியா டி ரோசி டுவிட்டரில் அந்தக் குற்றச்சாட்டைப் பதிவுசெய்தார்.

திரைப்படம் ஒன்றுக்கான தெரிவின்போது சீகல்  தம்மிடம் தகாத முறையில் நடந்துகொண்டதாக அந்த நடிகை குறிப்பிட்டிருந்தார். அது பற்றி, சீகல் கருத்துரைக்க விரும்பவில்லை என்று அவரது நிர்வாகி BBC செய்தியிடம் கூறினார்.

சீகல் மீது மற்ற சில பெண் கலைஞர்களும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.

ஹாலிவுட்டின் முன்னணித் தயாரிப்பாளர் ஹார்வி வைன்ஸ்டீன்(Harvey Weinstein) மீது பல பெண்கள் பாலியல் குற்றச்சாட்டுகளைச் சுமத்தியதைத் தொடர்ந்து, மீதான குற்றச்சாட்டுகள் வந்துள்ளன.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்