Images
  • Prabhas Anushka
    'பாகுபலி 2' சுவரொட்டியில் பிரபாஸ், அனுஷ்கா.

ஜாடிக்கு ஏற்ற மூடி, பிரபாஸுக்கு ஏற்ற ஜோடி!

அனுஷ்கா தமக்கு ஏற்ற ஜோடி என நடிகர் பிரபாஸ் கூறியதாகத் திரை ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஜோடி என்று அவர் சொன்னது திரைக்கா அல்லது வாழ்க்கைக்கா என்று தெளிவாகத் தெரியவில்லை. அந்த இருவருக்கும் இடையில் காதல் என்று வதந்திகள் வலம்வரும் நிலையில் பிரபாஸ் அவ்வாறு கூறியது மேலும் பல கேள்விகளை எழுப்புகிறது.

பாகுபலி 2 திரைப்படத்தின் மூலம் பெரும் புகழ்பெற்ற பிரபாஸ், சாஹோ என்ற படத்தில் நடிக்கவுள்ளார்.

உடல் எடையை மேலும் குறைத்துக்கொண்டு காவல்துறைக் கதாபாத்திரத்தில் அசத்தவிருக்கிறார் வாட்டசாட்டமாக இருக்கும் அந்நடிகர்.

உங்கள் கருத்து

Top