Images
  • 14May Sridevi's mom (1)

தமிழில் வெளியாகவுள்ள ஸ்ரீதேவியின் 'மாம்' படம்

ஸ்ரீதேவியின் நடிப்பில் அடுத்து வெளிவரவிருக்கும் படம் 'மாம்'.
அந்தப் படத்தைத் தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் வெளியிட செய்ய முடிவெடுத்துள்ளார் ஸ்ரீதேவி.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் , இந்திப் படங்களில் நடித்திருக்கும் ஸ்ரீதேவியின் 300ஆ வது படம் 'மாம்'.

அந்தப் படத்தை, இந்தியில் மட்டுமே வெளியிட வேண்டும் என ஆரம்பத்தில் முடிவெடுத்தனர்.

ஆனால், தென்னிந்தியாவிலும் ஸ்ரீதேவிக்கு நிறைய ரசிகர்கள் இருப்பதால், தமிழ், மலையாளம், தெலுங்கிலும் படத்தை மொழி மாற்றம் செய்து வெளியிட உள்ளனர்.

ஜூலை 7ஆம் தேதி வெளியாகவிருக்கும் அப்படத்துக்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். 

உங்கள் கருத்து

Top