ஜோ - தி பிளேக் அஸாசின்' - உள்ளூர்ப் படத்தின் முன்னோட்டம்
'ஜோ - தி பிளேக் அஸாசின்' என்னும் உள்ளூர்த் தமிழ்த் திரைப்படத்தின் முன்னோட்டம் நேற்று வெளியீடு கண்டது.
'ஜோ - தி பிளேக் அஸாசின்' என்னும் உள்ளூர்த் தமிழ்த் திரைப்படத்தின் முன்னோட்டம் நேற்று வெளியீடு கண்டது.
உள்ளூர்க் கலைஞர்கள் பலரும் நடித்துள்ள இப்படத்தைச் சூரியவேலன் இயக்கியுள்ளார். குத்துச்சண்டையை மையமாகக் கொண்டு திரைக்கதை வலம் வருகிறது. படத்தில் இடம்பெற்றுள்ள 'சாரல் மழையே' பாடல் உலகளவில் பலரையும் ஈர்த்துள்ளது.
உள்ளூர்த் தமிழ் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் அடுத்த மாதம் ஜூலை 8ஆம் தேதி ரெக்ஸ் திரையரங்கில் வெளியீடு காணவுள்ளது.