Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

பழம்பெரும் பாடகி சூலமங்கலம் ஜெயலட்சுமி காலமானார்

பழம்பெரும் பாடகி சூலமங்கலம் ஜெயலட்சுமி காலமானார். அவருக்கு வயது 80.

வாசிப்புநேரம் -
பழம்பெரும் பாடகி சூலமங்கலம் ஜெயலட்சுமி காலமானார்

சூலமங்கலம் ஜெயலட்சுமி( இடது).

பழம்பெரும் பாடகி சூலமங்கலம் ஜெயலட்சுமி காலமானார். அவருக்கு வயது 80.

சூலமங்கலம் ஜெயலட்சுமியும் அவரது தங்கை ராஜலடசுமியும் திரைப்படப்பாடல்களையும் பக்திப்பாடல்களையும் பாடுவதில் பெயர்பெற்றவர்கள்.  கர்நாடக சங்கீத மேடைகளில் இருவரும் பல்வேறு புகழ்பெற்ற கலைஞர்களுடன் இணைந்து நிகழ்ச்சியை நடத்துவர்.

முதிர்ந்த வயது காரணமாக சூலமங்கலம் ஜெயலட்சுமி உயிர் நீத்ததாக தகவல்கள் கூறுகின்றன.  ஜெயலட்சுமியின் விருப்பப்படி அவரது நல்லுடல், தனியார் மருத்துவமனைக்கு ஆய்வுக்காக தானம் செய்யப்பட்டது.

கலைமாமணி உள்ளிட்ட விருதுகளை ஜெயலட்சுமியும் காலஞ்சென்ற அவரது தங்கை ராஜலட்சுமியும் பெற்றனர். அவர்களது பக்திப்பாடல் ஒலிவட்டுகள் பரவலாக விற்பனையாகின.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்